வணிகங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளால் இயங்குகின்றன. விலைப்பட்டியல்கள் வணிகங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும்; மற்றொரு நிறுவனத்திற்கோ தனிநபருக்கோ பொருட்களையும் சேவைகளையும் வழங்கிய பிறகு அவை அனுப்பப்படுகின்றன. ஒரு விலைப்பட்டியல் பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்பதைக் குறிப்பிடுவதுடன், பரிவர்த்தனையின் அனைத்துச் சிறு விவரங்களையும் தெரிவிக்கிறது.
விலைப்பட்டியல்கள் ஏன் முக்கியமானவை?
வணிகங்களுக்கு விலைப்பட்டியல்கள் முக்கியமானவை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
-> அவை ஒரு வணிகத்தில் பணத்தின் வரவு மற்றும் செலவைப் பதிவு செய்து, அனைத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட்டன அல்லது பெறப்பட்டன என்பதை உறுதி செய்கின்றன.
-> விலைப்பட்டியல்கள் சட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பணம் செலுத்தப்படாத நிலையிலோ செலுத்திய தொகையில் சிக்கல் இருந்தாலோ, விலைப்பட்டியல் பதிவுகள் பிரச்சினையைத் தீர்க்கச் சான்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
-> எதிர்காலக் குறிப்புக்காகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான முக்கியக் கருவியாக அவை உள்ளன.
கருத்துகள்
இதுவரை கருத்துகள் எதுவும் இல்லை.